இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இதனிடையே சமீபத்தில் கைதி படத்தை பார்த்துவிட்டு ரஜினி லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து பாராட்டினார். டெல்லி படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய பின்னர் ரஜினியின் பாராட்டுக்கு நேரில் நன்றி தெரிவிக்க போயஸ் கார்டன் இல்லத்துக்கு லோகேஷ் கனகராஜ் சென்றார். இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்போதே ரஜினி – லோகேஷ் கனகராஜ் இணைவதாக செய்திகள் வெளியாகின.

தற்போது அவர் விஜய்யை வைத்து தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார்.

தளபதி 64 படத்தை முடித்த பிறகு லோகேஷ் ரஜினிகாந்தை வைத்து தான் படம் எடுக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . 40 ஆண்டுகள் கழித்து ரஜினியும், கமலும் சேர்ந்து நடிக்கப் போவது குறித்த செய்திகள்தான் இன்று கோடம்பாக்கத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. ரஜினி முன்பு தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவரும் அவர் அதன் பின்னர்  லோகேஷ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாஸன் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது கமல் ஓய்வில் உள்ளார்.

ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

அரசியலில் கமலும் ரஜினியும் இணைந்துசெயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் சேர்ந்து படத்தில் நடிக்கப் போகிறார்கள். லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப் போகிறாராம். ரஜினியையும், கமலையும் இயக்க பல இயக்குநர்கள் வரிசை கட்டி தவமிருக்க இப்படி ஒரு அரிய வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here