இது பாஜகவின் வெற்றி அல்ல: மின்னணு வாக்கு எந்திரங்களின் வெற்றி’ – சிவ சேனா

0
964

மின்னணு வாக்கு எந்திரங்களால்தான் பாஜக வெற்றி பெற்று வருகிறது என்று எங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க பாஜக வால் வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்த முடியுமா? என்று சிவசேனா கட்சியின் தலைவர்
உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார் .

கர்நாடக மாநிலத்தில் பாஜக பெற்ற வெற்றி அந்தக் கட்சியினுடைய வெற்றி அல்ல, அது மின்னணு வாக்கு எந்திரங்களுக்கான வெற்றி என்று கூறியுள்ளார் .

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் 78 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, பாஜக 104 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் முன்னிலையுடன் இருந்து வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவு அளித்து அந்த கட்சியை ஆட்சி அமைக்கக் கூறியுள்ளது.

இதற்கிடையே கர்நாடகத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே டிவிட்டரில் டிவீட் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பாஜகவினர் பெற்ற வெற்றி அவர்கள் பெற்ற வெற்றி அல்ல. அது மின்னணு வாக்கு எந்திரங்களின் வெற்றியாகும் என்று டிவீட் செய்துள்ளார்.

மேலும் இடைத் தேர்தலில் தோல்வியுறும் பாஜக சட்டப்பேரவைத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுகிறது. நீங்கள் உங்களை நம்பினால், மின்னணு வாக்கு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்துவதை கைவிட்டு, வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்தி வெற்றி பெறுங்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்தியாளர்க:ளிடம் பேசிய உத்தவ் தாக்கரே மின்னணு வாக்கு எந்திரங்களால்தான் பாஜக வெற்றி பெற்று வருகிறது என்று எல்லோருக்கும் சந்தேகம் இருக்கிறது. அந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது. கர்நாடகாவில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு என்னுடைய வாழ்த்துகள் .

ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்ற பின்பு வரும் முதல் பெரிய தேர்தல் என்பது பற்றி கருத்து கேட்டதற்கு சிலநேரங்களில் வெற்றி பெறலாம், சில நேரங்களில் தோல்வி அடையலாம். ஆனால் ஒருபோதும் உழைப்பை கைவிடக்கூடாது’’ என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

நன்றி : The Indian Express

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்