அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துக் கட்சி கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை அக்கட்சியின் செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (இன்று) கூட்டியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துக் கட்சி கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவர், திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறும் என்பது நடக்காத ஒன்று என்றும், எதிர்வரும் தேர்தல்களில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்றும் கூறினார். மத்திய அரசான பாஜகவுடன் உறவு வைத்திருப்பது தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here