ஆப்பிள் நிறுவனம், நேற்று(செவ்வாய்க்கிழமை) கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது புதிய மாடல் செல்போன்களை வெளியிட்டது. இந்நிகழ்ச்சியில், ஐபோன்-11,ஐபோன்-11‌ ப்ரோ, ஐபோன்-11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தட்டன. 

இதில்வெளியாஐபோன்-11‌ப்ரோ, ஐபோன்-11 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்க கேமராக்கள் மூலம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நின்றவாறே மூன்று கோணங்களில் புகைப்படம் எடுக்க கூடிய தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலாலா, மூன்று கேமராக்களின் வடிவத்தை தனது ஆடையின் டிசைனை குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்,  அதில், இது தற்செயலானதா? ஐபோன் மாடல்கள் வெளியான நாளில் நான் இந்த உடையை அணிந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். அவர் அணிந்திருந்த அந்த உடையில் ஐபோன் கேமராக்கள் போல டிசைன் இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த மாடல்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.