வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னை ஆர்கே நகர் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது, நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவினை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனையடுத்து விஷால், சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும் தனது ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான ஆடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து சில மணி நேரங்களில், தேர்தல் ஆணையத்திடம் அளித்த விளக்கத்தினால், வேட்பு மனு ஏற்கப்பட்டு விட்டதாக விஷால் தெரிவித்தார். ஆனால் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது வேட்பு மனு முதலில் ஏற்கப்பட்டு, பின்னர் நிராகரிக்கப்பட்டது என்பது நீதிக்குப் புறம்பானது என்றும், இந்த விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும், இதனை அவர் பதிவிட்டுள்ளார். இதனை பிரதமர் மோடிக்கு அவர் டேக் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்