பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேசியது காட்டுமிராண்டித்தனமானது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலையை, பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன், பாஜகவினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளினர். அதேபோன்று, தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருந்தார். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (மார்ச்.6), வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தந்தை பெரியார் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக பாஜக நகரச் செயலாளர் முத்துராமன், பிரான்சிஸ் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் ஹெச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், பெரியார் சிலை அகற்றவேண்டும் என பேசியதும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதும் காட்டுமிராண்டித்தனமானது என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்