இது என்ன தேர்தல் ஆணையமா? இல்லை பாஜகவின் பினாமி ஆணையமா?

0
209

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் , திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரச்சாரத்தின் போது, குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி பல மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,வெங்கையா நாயுடு ஆகியோரின் ஓரங்கட்டிவிட்டு தான் முன்னுக்கு வந்துள்ளார். மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் .அருண் ஜெட்லி ஆகியோர் மோடியின் தொல்லை தாங்காமல் தான் இறந்துவிட்டனர்” என்று கூறினார் .

உதயநிதி பேச்சுக்கு இதற்கு பாஜகவினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் பாஜக அளித்த புகாரின் பேரில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தனிமனித விமர்சனம் கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி முறைகளில் ஒன்று. எனவே இது தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு புறம்பானது .இதுகுறித்து இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் தனிமனித விமர்சனம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆனால் செந்தில் பாலாஜியை தரக்குறைவாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய அண்ணாமலைமீது நடவடிக்கை இல்லை. இது என்ன தேர்தல் ஆணையமா இல்லை பிஜேபியின் பினாமி ஆணையமா? என்று  பதிவிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here