சாலை பாதுகாப்பு மற்றும் வேகத்தடை தொடர்பான உத்தரவு நடைமுறை படுத்தப்படாதது குறித்து விளக்கம் அளிக்கும்படி பத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சாலை பாதுகாப்பு மற்றும் வேகத்தடை சார்ந்த விவகாரங்களில் மோட்டார் வாகனச் சட்டம் முறையாக பின்பற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பத்து மாநில அரசுகளுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும், இதுவரை எந்த அறிக்கையும் சமர்பிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை திங்கட்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இது உச்சநீதிமன்றமா இல்லை ஜோக் நீதிமன்றமா என உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியது.

அஸ்ஸாம், ஆந்திரா, டெல்லி, பீகார், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய பத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் போக்குவரத்து செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் சாலை பாதுகாப்பு உத்தரவு செயல்படுத்தப்படாதது குறித்தும், அதன் செயலாக்க நிலை குறித்தும் நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மத்திய அரசின் சாலை பாதுகாப்பு விளம்பரத்திலிருந்தும் அமீர்கான் நீக்கம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்