மாநாடு கலைந்தது – எஸ்டிஆருக்கு டாட்டா காட்டிய வெங்கட்பிரபு?

வெங்கட்பிரபு இயக்கத்தில் எஸ்டிஆர் மாநாடு என்ற படத்தில் நடிப்பதாகவும், சுரேஷ் காமாட்சி படத்தை தயாரிப்பதாகவும் சென்ற வருடம் அறிவித்தனர். யுவன் படத்துக்கு இசையமைப்பதாகவும் முடிவானது. வெங்கட்பிரபுவின் கடைசிப்படம் பார்ட்டி இன்னும் வெளியாகாத நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இறுதியில் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவித்தனர். ஆனால், படம் கைவிடப்பட்டதாக தற்போது தகவல் பரவி வருகிறது. வெங்கட்பிரபு மாநாடு படத்தை கைவிட்டு அமேசானுக்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கும் முயற்சியில் உள்ளார். மாநாடு தொடருமா இல்லை அப்படியே தொலையுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கத்தை தயாரிப்பாளர் ஓரிரு தினங்களில் வெளியிடலாம்.

இதுவும் காப்பிதானாம்

நேற்று வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் பிரெஞ்ச் திரைப்படம் பாயின்ட் பிளாங்கின் தழுவல் என ஏற்கனவே கூறியிருந்தோம். நேற்று வெளியான தெலுங்குப் படங்களில் ஒன்று ஐ ஸ்மார்ட் சங்கர். பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் ஹாலிவுட் கிரிமினல் படத்தின் திருட்டு தழுவல். கெவின் காஸ்ட்னர் கிரிமினலில் நடித்திருந்தார். பயங்கரமான கிரிமினல் கெவின் காஸ்ட்னர். அவரது மூளையில் இறந்துபோன போலீஸ் அதிகாரியின் நினைவுகளை செலுத்தி, அந்த அதிகாரி கண்டுபிடித்த ரகசியத்தை அறிய முயற்சிப்பார்கள். அதே கதையை இந்தியப் பின்னணியில் கரம் மசாலா சேர்த்து பூரி ஜெகன்நாத் எடுத்திருக்கிறார். படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுள்ளது.

தனுஷ் படத்தின் இசையமைப்பாளர் உறுதியானது

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோவும், ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த மாதம் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது. ஐஸ்வர்யா லட்சுமி நாயகி. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் முடிவாகாமல் இருந்தது. இப்போது சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதேபோல் ஸ்ரேயாஷ் கிருஷ்ணா படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங். தனுஷ் இதுவரை நடித்த தமிழ்ப்படங்களில் இந்தப் படமே அதிக பொருட்செலவில் தயாராகும் படமாகும்.

மங்கள்யானுக்கு வழிவிட்ட பிரபாஸின் சாஹேn

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் சாஹேn. தமிழ், இந்தி, தெலுங்கு உள்பட 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. ஆகஸ்ட் 15 படம் திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தனர். அதே ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியில் அக்ஷய் குமார் நடித்திருக்கும் மிஷன் மங்கள், ஜான் ஆபிரஹாமின் பட்லா ஹவுஸ் உள்பட 3 முக்கிய படங்கள் வெளியாகின்றன. இதனால் சாஹேn படத்தின் வெளியீட்டை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here