இதுவரை நம் நாட்டின் காவலாளிகள் எப்படி எதை பாதுகாத்தார்கள் ? விவரம் இங்கே

0
483

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்க்கத்தில்  இந்த மக்களவைத் தேர்தலுக்காக தனது பெயரின் முன்னால் காவலாளி  என்று சேர்த்துக் கொண்டுள்ளார்.  அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களையும் ,  அவரது அமைச்சர்களையும் தங்களது பெயருக்கு முன்னால் காவலாளி என்று சேர்த்துக் கொள்ளவும் கூறினார். 

காவலாளி ரவிசங்கர் பிரசாத் ,  நம் நாட்டின் தகவல்தொழில்நுட்பம் அமைச்சர் நானும் காவலாளி தான் என்ற பிரச்சாரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது என்று ஊடகங்களிடம் பெருமையடித்துக் கொண்டார். காவலாளி என்று கூறி ஒரு வீடியோவையு அவர்கள் வெளியிட்டுள்ளனர். 

காவலாளி என்றால் பாதுகாப்பவர் என்று அர்த்தம்.   இதுவரை இந்த காவலாளிகள் எப்படி எதை பாதுகாத்தார்கள் என்று இங்கே பார்ப்போம் 

  1. குஜராத், உனாவில் தலித்துகள் மீதான தாக்குதல்                                            ஜூலை 11 , 2016 அன்று பசுவைப் பாதுகாக்கிறோம் என்று கூறும் பசுக்குண்டர்கள் பாலுசாவரியா –  வையும் அவரது குடும்பத்தையும் இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக அடித்தனர். இறந்த பசுவின் தோலை உரிப்பதில் கிடைக்கும் வருமானத்தில்தான்  அக்குடும்பத்தின் வாழ்வாதாரமே இருக்கிறது. அவர்களை இரும்புத்  தடியாலும்,  கம்புகளாலும்,  கத்தியாலும் பசுக்குண்டர்கள் தாக்கினார்கள். 4  பேரை உனா டவுனுக்குள் இழுத்து வந்த பசுக்குண்டர்கள் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து கொடுமைபடுத்தினர். இவ்வாறு அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவிகிடந்தது . 

குற்றவாளிகள் மீதான விசாரணை ஆகஸ்ட்  2018 இல்தான் துவங்கியது. 43 குற்றவாளிகளில் 21 பேர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள்  

ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளிகளில் ஒருவர்,   2 வருடத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.  பாதிக்கப்பட்டவர்கள் புத்தமதத்திற்கு மாறியதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் அது. 

2. லவ் ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம் தொழிலாளியை கொன்றது 

டிசம்பர் 6 , 2017 அன்று ராஜஸ்தானில் ராஜ்சமண்ட் பகுதியில் முகமது அஃரசூல் என்ற மேற்கு வங்கத்திலிருந்து வந்து வேலை செய்த தொழிலாளியை வெட்டுக்கத்தியால் அடித்துக் கொன்று அவரது உடலுக்கு தீ வைத்துவிட்டனர் . 

கொன்றவர் பெயர் ராஜ்சமண்ட் பகுதியைச் சேர்ந்த சாம்புலால் ரேகர் என்று தெரியவந்தது . அஃரசூல் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஹிந்து பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார் என சந்தேகிக்கப்பட்டதால் இந்தக் கொலை நடந்தது. சாம்புலால் ரேகர் இந்தக் கொலையை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதால் வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் இந்தக் கொலையைக் குற்றவாளி  நியாப்படுத்தி பேசியதும் இடம் பெற்றிருந்தது .   

அந்தக் குற்றவாளி வெளியிட்ட மற்றுமொரு வீடியோவில் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.  லவ்ஜிகாத் என்றால் இப்படித்தான் நடக்கும் என்ற எச்சரிக்கை . லவ் ஜிகாத் என்பது கற்பனையான  ‘இஸ்லாமியசதி’ , இதில் முஸ்லிம் ஆண் ஹிந்து பெண்ணை ஏமாற்றி அவரை முஸ்லிமாக மாற்றி திருமணம் செய்வது – இது ஹிந்துத்துவா அமைப்புகளின் விளக்கம் 

3. 2 கால்நடை வியாபாரிகளை , அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டது 

மார்ச் 17, 2016 இல் , ஜார்க்கண்டில் கால்நடை வியாபாரிகளான  32 வயது மஷ்லும் அன்சாரி மற்றும் 13 வயது இமித்தியாஸ் கான் ஆகியோரைக் கொன்று மரத்தில் தொங்கவிட்டிருந்தனர். 

அவர்கள் மாடுகளை அங்குள்ள கிராமத்தில் இருக்கும் சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது பசுக்குண்டர்களால் தாக்கப்பட்டனர்.  அவர்களிடமிருந்து மாடுகளையும், பணத்தையும் கொள்ளையடிப்பதற்காகவே இந்தக் கொலை நடந்திருக்கிறது என்று போலீஸார் கூறியுள்ளனர்.  பாரதீயகௌ (மாடு) கிராந்தி மஞ்ச் – அமைப்பின் (பசுக்குண்டர்களின் அமைப்பு) பிரசங்கி அர்ச்சார்யா கோபால் மன்ஜில் மகாராஜ்தான் காரணம் என்று  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அபோது கூறினார்கள் . இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 8 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை கிடைத்துள்ளது.   

Eight-year-old abducted, raped and murdered in Kathua

4. காஷ்மீர், கத்துவாவில் 8 வயது சிறுமியை கடத்தி , வன்கொடுமை செய்து கொலை செய்தது 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம்,  ரசானா பகுதியைச் சேர்ந்த முஹமது யூசூஃப் என்பவரின் மகள் அசிஃபா என்ற எட்டுவயது சிறுமி, கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டுக் கொலைச் செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, காவலர்கள் உட்பட எட்டு பேர் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டனர்.

சிறுமிக்கு   போதை மருந்துக் கொடுத்து கோயிலில் வைத்து வன்கொடுமை செய்யபட்டார்.   இப்பகுதியில் இருந்த இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இந்தக்  கொடுமையின் ஆதாரங்களை அழிக்க முயன்றதால் கைது செய்யப்பட்டனர். 

கைதைக் கண்டித்து ஹிந்து வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வனத்துறை அமைச்சர் லால்சிங் சௌத்ரி , தொழில்துறை அமைச்சர் சந்தர்பிரகாஷ் உட்பட பல பாஜக அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். 

ஆசிஃபாவின் வழக்குக்காக ஆஜரான  வழக்கறிஞர் தீபிகா ரஜவாத்-க்கு பல கொலை மிரட்டல்கள் வந்தது. பல வாரங்கள் கழித்து சௌகிதார் நரேந்திர மோடி இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்தார். 

5 . பாஜக அமைச்சர் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பசுக்குண்டர்களுக்கு மாலை அணிவித்தார். 

இறைச்சி வியாபாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதைசெய்ததார். 

ஜூன் 29, 2017 அன்று , மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்கர் பகுதியில் கும்பல் ஒன்று காருக்குள் இருந்த அலிமுதின் அன்சாரி என்பவரை வெளியே இழுத்து அடித்து கொலை செய்தது. இது தொடர்பாக, உள்ளூர் பாஜக தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டது . 

இதில் எட்டு பேரின் ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . உள்ளூர் பாஜக தலைவரான 45 வயதாகும் நித்யானந்த் மாத்தோ  முதலில் விடுதலை செய்யப்பட்டார். பின்பு  ஏழு பேர் விடுதலையான போது  ஹசாரிபாக் புறநகர் பகுதியியிலுள்ள சின்ஹாவின் வீட்டிற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அவர்களை ஜெய்ந்த் சின்ஹா மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

2014 ஆம் ஆண்டிலிருந்து , அதாவது மோடி ஆட்சியில் அமர்ந்த பிறகு வெறுப்பினால் நடந்தக்  குற்றங்கள் 140; இதில் 41 பேர் கொல்லப்பட்டனர்.  

வெறுப்பால் நடந்தக் குற்றங்கள் குறித்த அறிக்கையில் மதசிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள்  மீது வன்முறை நிகழ்த்தப்படுகிறது . இந்த மாதிரியான வெறுப்புக் குற்றங்களை அரசு தண்டிப்பதே இல்லை . சௌகிதார் என்று வேஷம் தரித்துக் கொண்டிருக்கும் பல பாஜக தலைவர்கள் இந்தக் குற்றவாளிகளை பாதுகாத்தவர்கள் . 

6. பாஜக எம்பி பாஜக எம்எல்ஏவை ஷூவால் தாக்கியது 

உத்தர பிரதேச மாநிலம் சாந்த் கபீர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த சரத் திரிபாதி. இதே பெயருள்ள தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் ராகேஷ் சிங் பாகேல். இந்நிலையில் சாந்த் கபீர் நகர் பகுதியில் நலத் திட்ட உதவி வழங்குதல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சரத் திரிபாதி, ராகேஷ் சிங் பாகேல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது  தொகுதியில் போடப்பட்டுள்ள சாலைத்திட்டம் தொடர்பான அடிக்கல்லில் பெயர் இடம் பெறுவது தொடர்பாக சரத் திரிபாதி, ராகேஷ் சிங் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த சரத் திரிபாதி, தனது ஷூவைக் கழற்றி ராகேஷ் சிங்கை சரமாரியாக அடித்தார்.

இந்த சரத் திரிபாதி தற்போது சௌகிதார் சரத் திரிபாதி !!!!!!

https://thewire.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here