அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவுவதுதான் பாரதிய ஜனதா கட்சியின் பாணி போலும் என அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

கோவை சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடந்து இரண்டாவது நாளாக ஆளுநர், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தூய்மை இந்தியா’திட்டத்தின்கீழ் செயல்படும் பயோ டாய்லெட்டையும் ஆய்வு செய்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை தமிழக அமைச்சர்கள் ஆதரித்துப் பேசியும் வருகின்றனர். அதேநேரத்தில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில் அவர், ”இதுபோன்ற ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியது என்று அமைச்சர்கள் சொல்வது வெட்கக்கேடானது. இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய முதல்வர் பழனிச்சாமி தனது சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்!” என பதிவிட்டுள்ளார்.

ttv-1

ttv-2

இதையும் படியுங்கள்: சென்னை பாக்ஸ் ஆபிஸ் – அட, அறம் இவ்ளோ வசூலித்ததா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்