இந்திய நீதித்துறை வெளியிட்டுள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள உயர்நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

இந்தியாவில் மொத்தம் 24 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. இந்த 24 உயர்நீதிமன்றங்களில் சுமார் 42,10,869 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 49 சதவிகித வழக்குகள் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளவை.

எந்த உயர்நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன?

அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள உயர்நீதிமன்றங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளது. 2017ஆம் ஆண்டின் கணக்கின்படி, இந்த உயர்நீதிமன்றத்தில் 9,17,955 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?

இந்தப் பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் இரண்டாவது இடத்திலுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 3,41,255 வழக்க்குகள் நிலுவையில் உள்ளன. இதனைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உள்ளது. இதில் 3,19,123 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்திய உயர்நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்கள் எத்தனை?

இந்தியாவில் மொத்தமுள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 1,079 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும். இதில் 676 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 403 பணியிடங்கள் காலியாகவுள்ளன. அதாவது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட 37 சதவிகித பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் 58 நீதிபதிகள் உள்ளனர்.

நன்றி: indiaspend.com

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்