இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற இடத்திலிருந்து சிறிதளவும் இறங்கிவிடக் கூடாது என அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா கட்சித் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு, அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற இடத்திலிருந்து சிறிதளவும் இறங்கிவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், எஃகு கோட்டையில் விரிசல் விழுந்துவிடாதா, தடி ஊன்றியாவது எழுந்து நிற்க முடியுமா என்று எதிரிகள் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா இருந்தபோது எந்த வகை பாதுகாப்பை அதிமுக தொண்டர்கள் உணர்ந்தார்களோ அதை இனியும் உணரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: உங்கள் குழந்தை சரியாக படிக்கவில்லையா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்