ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய ராகுல் காந்தி, “ரஃபேல் விமானம் வாங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலை விவரத்தை வெளியிட முடியாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதற்கு என்ன அர்த்தம்?. இதில் ஊழல் உள்ளது என்றுதான் அர்த்தம். பிரதமர் மோடி, தனிப்பட்ட விதமாக சென்று ரஃபேல் ஒப்பந்தத்தை மாற்றினார். இதனை நாடே அறியும்” என்றார்.

மேலும் அவர் இந்த விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும், ”ரஃபேல் விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்பவர்களை ஆண்டி-இந்தியன் என்கிறார்கள்” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் பேசப்பட்ட விலையைவிட தற்போது அதிக விலை கொடுத்து ரஃபேல் விமானம் வாங்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here