வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கிக் கொண்டு வருகிறது. அதேபோன்று, வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு செல்லாது எனவும் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

rbi

இது குறித்து மணி லைஃப் என்னும் (moneylife.in) என்ற செய்தி இணையதளம் சார்பில் யோகேஷ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மத்திய ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள ரிசர்வ் வங்கி, வங்கிகளில் புதிய கணக்குகள் தொடங்குபவர்கள் மற்றும் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண், பான் எண் இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு அரசிதழ் வெளியிட்டிருந்தது என்றும், ரிசர்வ் வங்கி இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

நன்றி : the new indian express

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்