நீட் தேர்வுக்காக, மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்து விலக்களிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கையாக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அதிமுக அமைச்சர்கள் பேசி வந்தனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வுக்காக, மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் அவர், இந்த பயிற்சிக்காக ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் தங்கள் பெயரை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பதிவு செய்ய வேண்டும் என்றார். வரும் அக்டோபர் 24ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: டெங்குவா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ அவசர நிலையை ஏன் அறிவிக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்