இதயம் சம்பந்தப்பட்டது: ஏ.ஆர்.ரஹ்மான்

0
109

நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள தில் பெச்சாரா படத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசைஅமைத்துள்ளார்.

பாடல்கள் குறித்துஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது: இந்த படத்தில் முகேஷ் சாப்ராவுடன் இணைந்தது மிகப்பெரிய அனுபவம். அவரது உற்சாகம் பிறருக்கும் தொற்றிக் கொள்ளக்கூடியது. இப்படம்மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பல இதயங்கள் நிறைந்த இப்படத்தில் தற்போது சுஷாந்த்தின் நினைவுகளும் உள்ளன.

காதல் பாடலுக்காக பாடலாசிரியர் அமிதாப் பட்டாச்சார்யாவுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. பாடல்கள் இந்தியாவின் சிறந்த இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆல்பம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இசையமைப்பதற்கு எந்த விதிமுறைகளும் தேவையில்லை, அது இதயம் சம்பந்தப்பட்டது. நான் பாடல்களை உருவாக்கும்போது அவைகளை சிறிது நேரம் சுவாசித்து விட்டுத்தான் இயக்குநரிடம் காண்பிப்பேன் என்றார் ரகுமான்.

வருகிற 24 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள
தில் பெச்சாரா,  தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்ற ஹாலிவுட் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப் படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளிவந்து பெரும் பரவேற்ப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here