எலக்ட்ரிக் வாகனங்களுக்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால், 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும் என வாகனங்களுக்கான உபகரண பாகங்கள் தயாரிக்கும் துறையினர் எச்சரித்துள்ளனர்.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் கச்சா எண்ணைய் இறக்குமதியைக் குறைக்கவும் எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்புக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. மத்திய அரசின் இந்த நவடிக்கையால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும் என வாகனங்களுக்கான உபகரண பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (Automotive Component Manufacturers Association of India -ACMA) தெரிவித்துள்ளது.

vech-1

நாடு முழுவதும் பிஎஸ்-4 மாசு விதிமுறைகளுக்கு ஏற்ற வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாகன புகையைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் பிஎஸ்-6 வாகனங்களை ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு, உதிரி பாகங்கள் தயாரிக்கும் இத்துறையைச் சேர்ந்தவர்கள், அதற்கான முதலீடுகளையும் தற்போது செய்து வருகின்றனர். இந்த முதலீட்டுக்கான லாபத்தைப் பெறுவதற்கு 10 ஆண்டுகளாவது பிடிக்கும் எனவும், இந்நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் தங்களுக்கு நட்டம் ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

2017ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, ஆட்டோமொபைல் துறையில் 1.5 மில்லியன் பேர் நேரடியாகவும், 1.5 மில்லியன் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகன தயாரிப்புகளுக்கு உடனடி முக்கியத்துவம் கொடுத்தால் 15 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் எனவும் உபகரண பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

source: livemint.com

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here