என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை என டிடிவி தினகரன் அணியிலிருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சமீபத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அமைப்பையும், ஜெயலலிதா உருவம் பொறித்த கொடியையும் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து அவரது தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு கட்சியை நடத்த டிடிவி தினகரன் முயற்சிக்கிறார் என குற்றம் சாட்டி, அந்த அணியிலிருந்து விலகினார். திராவிடத்தைப் புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது என்றும், அவர் விலகியதால் யாருக்கும் இழப்பில்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் நாஞ்சில் சம்பத், ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் தன்னை பார்த்தார்கள் என்றும், அதனால்தான் அந்த அணியை விட்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்