ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் சில வாரங்கள் முன்பு வெளியாகின. இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளிவர தொடங்கியுள்ளது.

புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 90 ஹெர்ட்ஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இது ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போனை விட சற்றே சிறிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

கேமராவைப் பொறுத்தவரை நான்கு பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இவற்றில் மூன்று கேமராக்கள் செங்குத்தாகவும் இதன் அருகில் 3டி ToF சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார் காணப்படுகிறது. இதன் பவர் பட்டன் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வழங்கப்படுகிறது.

வால்யூம் பட்டன்கள் இடதுபுறத்திலும், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், மேம்பட்ட ஸ்பீக்கர் கிரில் ஸ்மார்ட்போனின் கீழ்பகுதியில் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here