இணையத்தில் வாங்கலாம், விமானம்!

0
561

விமானம் வாங்கலாம் வாங்க! இப்படிச் சொன்னா என்ன கேப்பீங்க? இது என்ன அதிசயமா? ”காசு இருந்தா வாங்கலாம்தான்”. அது எனக்கும் தெரியுங்க. ஆனா, இப்ப ஒரு புது செய்தி என்ன தெரியுமா? இணையத்தில ஒன்றிரண்டு ‘கிளிக்’ல விமானம் வாங்கலாம். புரியலையா? நாம இணையத்தில ‘ஷாப்பிங்’ பண்ணுவோம்ல. அதே மாதிரி ஈஸியா விமானம் வாங்கலாம். அப்படி ஒரு ஒப்பந்தத்தைதான் ’ட்ரூம்’ அப்படிங்குற கார் சந்தை நிறுவனமும், ‘ஜெட் செட் கோ’ அப்படிங்குற தனியார் விமான நிறுவனமும் போட்டு இருக்காங்க.
“விமானப் போக்குவரத்து இந்தியாவுல வளர்ந்துட்டு வருது. இதுல உலகத்துலயே பத்தாவது இடத்துல இந்தியா இருக்கு. சொந்தமா விமானம் வாங்குறதுல ஐந்தாவது இடத்துல இருக்கு. இத, நாங்க பயன்படுத்திக்க நினைக்குறோம். விக்குற அல்லது வாடகைக்கு எடுக்குற ஒவ்வொரு விமானத்துக்கும் ‘ட்ரூம்’ நிறுவனத்துக்குக் கமிஷன் கிடைக்கும்”, ட்ரூம் நிறுவனத்தின் நிறுவனர், சந்தீப் அகர்வால்தான் இத சொல்லியிருக்கார். சொந்தமா சொகுசு விமானம் வச்சிருக்குற இந்தியர்கள கொஞ்சம் பார்ப்போம்.
(2011இல் rediff.com வெளியிட்டது)
IMG-20150831-WA0002
இதுல வாங்குறது மட்டும் இல்ல. விமானம் அல்லது ஹெலிகாப்டர வாடகைக்குக்கூட எடுக்கலாம். அது மட்டும் இல்ல, விமானம், ஹெலிகாப்டர விற்கக்கூட செய்யலாம். நம்ம மொபைல்ல இதுக்குனு ஒரு செயலிகூட இறக்கிக்கலாம்.
விலைதான் கொஞ்சம் கூட. ‘எம்ப்ரேயர் லெகசி 600’ வணிக ஜெட் ரூ. 64.5 கோடி. ‘ஹாக்கர் 900எக்ஸ்.பி.’ பெருநிறுவன ஜெட் ரூ. 45.9 கோடி. இந்த விமானத்துல 9-14 இருக்கைகளும், ஹெலிகாப்டரில் 4-8 இருக்கைகளும் இருக்கும்.
ட்ரூம் நிறுவனத்துல 10,000 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருக்கு. கூடிய சீக்கிரத்துல கடல்வழிப் போக்குவரத்துலயும் கால் பதிக்கப் போறாங்க. ”நாங்க, ஜெட் ஸ்கை, அதிவேகப் படகு, இன்னும் பல நீர் வழிப்போக்குவரத்து வாகனங்களையும், ‘ஜாலி ரைட்’ வாகனங்களையும் விற்பனைக்குக் கொண்டுவரப் போறோம். 2016-இல் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றும் அகர்வால் கூறினார்.
பெரும் பணக்காரர்களுக்குச் சந்தோஷம் தரக்கூடிய செய்திதான். இனி தன் காதலிக்கும் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கும் ‘விமானம்’, ‘ஹெலிகாப்டர்’ பரிசளித்து மகிழலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்