இந்தியாவில் ஸ்மார்ட் போன் இணையதள பயன்பாடு அதிகரித்து வருகிறது.  இந்நிலையில்,இணைதளத்தில் வீடியோக்கள் பார்ப்பது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.  அந்த ஆய்வில் அமெரிக்கர்களை விட இந்தியர்கள் இன்னும் சில மாதங்களில்,  அதிக நேரம் இணையதளத்தில் வீடியோக்களை பார்ப்பவர்கள்  பட்டியலில்  முன்னிலை பெற உள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்திய மக்கள் செய்திகளை டிஜிட்டல் தளத்தில் வீடியோக்களாக அதிகளவில் பார்த்து வருவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்தியர்கள் அதிக நேரம் யுடியூப், டிக்டாக், ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட தளங்களிலும் செலவிடுவதும் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டு இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்களை இணைய தளங்களில் செலுவிட்டு வந்தனர்.  இந்த சராசரி அடுத்த ஆண்டில் ஒரு நாளைக்கு 2 மணிநேரம் 21 நிமிடங்களாக அதிகரிக்கும் என்று இந்தப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியர்கள் அதிகளவில் இணையதளத்தில் நேரத்தை செலவிடுவதற்கு எளிதில் கிடைக்கும் 4 ஜி இணைய சேவையே காரணம் என்று இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. அத்துடன் உலகளவில் இணையதள டேட்டா சேவை அதிகமாக பயன்படுத்துவது இந்தியர்கள்தான் என்று தெரியவந்துள்ளது. இணையதளத்தில் வீடியோக்கள் பார்ப்பவர்களில் 70 சதவிகிதம் பேர் யுடியூப்பில்தான் வீடியோக்களை பார்க்கின்றனர் என்ற தகவலும் ஆய்வின் மூலம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)