மார்ச் 4ஆம் தேதி துவங்கும் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விலகியதால் மந்தனா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இங்கிலாந்துடன் நடந்து வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலிருந்தும் காயம் காரணமாக ஹர்மன்ப்ரீத் கவுர் வெளியேறினார். தற்போது அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

ஸ்மிருதி மந்தனா தனது 15வது ஒருநாள் அரைசதத்தை மும்பையில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்துடனான இரண்டவது ஒருநாள் போட்டியில் அடித்தார். இந்தப்போட்டியில் 161 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழக்க, அடுத்து ஆடிய இந்தியா, மந்தனாவின் சிறப்பான ஆட்டத்தால் எளிதாக போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது.

முன்னதாக நியூசிலாந்தில் 3-0 என தொடரை இழந்தாலும் மந்தனா 58,36,86 என ரன்களை குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஆடவுள்ள 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் 4,7 மற்றும் 9 தேதிகளில் கவுகாத்தியில் நடைபெறவுள்ளது.

இந்திய பெண்கள் அணி : மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா(கேப்டன்) , ஜெமினா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, தனியா பாட்டியா (கீப்பர்), பாரதி புல்மாலி, அனுஜா பாட்டில், பூனம் யாதவ், ஷிகா பாண்டே, கோமல் ஸன்ஸாத், அருந்ததி ரெட்டி, எக்தா பிஷட், ராதா யாதவ், வெதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் டியோல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here