புனேவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்துள்ளது.

தவான் 98 ரன்கள் குவித்து இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஸ்கோரர் ஆனார். கேப்டன் கோலி 56 ரன்களும், கே.எல். ராகுல் 62 ரன்களும், குருணால் பாண்ட்யா 58 ரன்களும் குவித்தனர். தவான் – கோலி மற்றும் ராகுல் – குருணால் பாண்ட்யா இணையர் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 

இங்கிலாந்து அணிக்காக ஸ்டோக்ஸ், சாம் கரண் மாதிரியான பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியிருந்தனர். அதன்மூலம் இந்தியாவின் ரன் ரேட்டையும் இங்கிலாந்து கட்டுப்படுத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட் செய்ய சொல்லி பணித்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டோக்ஸ் மூன்று விக்கெட்டுகளையும், மார்க் வுட் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.    

தனது முதல் ஒருநாள் போட்டியில் குருணால் பாண்ட்யா 31  பந்துகளில் 58 ரன்களை குவித்து அரை சதம் கடந்து அசத்தினார். அதில் 2 சிக்சரும், 7 பவுண்டரிகளும் அடங்கும். மறுபக்கம் கே. எல். ராகுல் இந்தப் போட்டியில் 62 ரன்கள் எடுத்ததன் மூலம் பார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. 

இங்கிலாந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற ஓவருக்கு 6.36 ரன்கள் வீதம் 318 ரன்களை குவிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here