இங்கிலாந்தில் மின்சார டாக்ஸிகளுக்கு வயர்லெஸ் மூலம் சார்ஜ்

0
172

இங்கிலாந்து அரசு, மின்சார டாக்ஸிகளுக்கு சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்யும் நடைமுறைக்குப் பதில் வயர்லெஸ்(Wireless) முறையில் சார்ஜ் செய்யும் புதிய நடைமுறைக்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

இங்கிலாந்தில் மின்சார டாக்ஸிகள் பெட்ரோல் பங்க்கள் போல மின்சார சார்ஜிங் மையங்களில் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றன. இதில், ஒரே சமயத்தில் பல வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய முடியாத நிலை பல நேரங்களில் மிகப் பெரும் சிக்கலாக அமைகிறது. இவற்றுக்கு தீர்வு காண வயர்லெஸ் முறையில் சார்ஜிங் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பத்தைச் சார்ந்து செயல்பட இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இதன் 6 மாதகால முன்னோட்டமாக வயர்லெஸ் சார்ஜிங் முறைக்கான புதிய தொழில்நுட்பத்தில் 4.43 மில்லியன் அமெரிக்க டாலரை இங்கிலாந்து அரசு முதலீடு செய்துள்ளது. இதற்காக வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் பொறுத்தப்பட்டுள்ள 10 நிஸ்ஸான் மற்றும் எல்இவிசி மின்சார டாக்ஸிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ஓட்டுநர்களிடம் இருந்தும் கட்டணம் வசூலிகப்படப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் மின்சார டாக்ஸிகளுக்கு வயர்லெஸ் முறையில் சார்ஜ் செலுத்தும் வகையிலான தொழில்நுட்பத்தையே முற்றிலும் நடைமுறைப்படுத்துவதற்காக இங்கிலாந்து அரசு இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here