புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் அதனை மாலையில் முடிக்கும் போது, பழத்தை உண்டு முடிப்பது வழக்கம். அதன்பின்பு இறைவனை வணங்கி விட்டு அனைவருக்கும் இஃப்தார் விருந்தை அளிப்பார்கள். அந்த விருந்தில் இஸ்லாமியர்கள் தவிர அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது. இப்படிப்பட்ட இந்த இஃப்தார் விருந்தில் உண்பதற்கான ரெசிப்பி ஒன்றை இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 கிலோ
மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 4
எலுமிச்சை – அரை மூடி
கலர்பொடி – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
கருவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.

2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி 5 நிமிடம் வைக்கவும், வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்.