ஆஹா, ரூ. 179 விலையில் இப்படி ஒரு சலுகையா? : ஏர்டெல் புதிய அறிவிப்பு

0
997

ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள புதிய பிரீபெயிட் சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள காப்பீடு வழங்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் ரூ. 179 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையில் வழக்கமான அன்லிமிட்டெட் பலன்களுடன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பாரதி ஆக்சா உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. 

இத்துடன் புதிய சலுகையில் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் பிரீமியம் சந்தா, விண்க் மியூசிக் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே இதேபோன்ற சலுகைகள் நிறைந்த சலுகையினை ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 149 விலையில் வழங்கி வருகிறது. எனினும், இந்த சலுகையில் உயிர் காப்பீடு வழங்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here