ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் ஒத்திவைப்பு

The T20I series between Australia and West Indies has been postponed. The series was scheduled to get underway in October. It included three T20Is to run from October 4 to 9th of that month.

0
163

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர்4, 6, 9 தேதிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடர் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த டி20 தொடரும் ஒத்திவைக்கப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த டி20 தொடர் 2021அல்லது2022 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு முன்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

ஆஸ்திரேலியாவில் டி 20 ஐ தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யுஏஇ) இல் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2020 இல் தங்கள் வீரர்கள் பங்கேற்க இந்த முடிவு வழி விட்டிருக்கிறது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலியா வீரர்கள் எப்போதும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here