ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே ஆன 3 ஒருநாள் போட்டி தொடர் நாளை(சனிக்கிழமை) ஆரம்பிக்கிறது.

ஏற்கனவே 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனிலும் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலியா மண்ணில் வரலாற்று சாதனை படைத்தது.

இந்திய அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, டோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் போன்றோர் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது, சாஹல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் உள்ளனர். இந்த ஒரு நாள் தொடரில் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளைச் சாய்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், பீட்டர் சிடில், ஆடம் ஜம்பா, நாதன் லயன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் போன்ற வீரர்கள் உள்ளனர்.

முதல் ஒருநாள் போட்டி நாளை(சனிக்கிழமை) சிட்னியில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 2 வது போட்டி 15 ஆம் தேதி அடிலெய்டிலும், 3 வது போட்டி 18 ஆம் தேதி மெல்போர்னிலும் நடைபெறுகிறது.

இந்நிலையில், பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு விளையாடத் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

இரு அணிகளின் விபரம் :

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, டோனி, தினேஷ் கார்த்திக், கேதர் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்த்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், கலீல் அகமது.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டேன்லேக், ஜேசன் பெரன்டார்ப், பீட்டர் சிடில், நாதன் லயன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் டர்னர்.

இதுவரை இரு அணிகளும் 128 போட்டிகளில் ஆடியுள்ளன. இதில் இந்தியா 45 முறையும், ஆஸ்திரேலியா 73 முறையும் வெற்றி பெற்றன. 10 ஆட்டத்தில் முடிவு இல்லை.

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here