விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. முதலில் நடந்த டி20 போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக நாளை பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 13 வீரர்கள் கொண்ட இந்த பட்டியலில் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்,ராகுல், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விகாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here