இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் துவங்கியது.

ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் சிடில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்திய அணியில், பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த ஹர்திக் மற்றும் ராகுல் இன்றைய போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்களும், ஷேன் மார்ஷ் 53 ரன்களும், கவாஜா 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ஸ்டோனின்ஸ் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

289 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா, முதல் ஓவரின் கடைசி பந்தில் தவான், பெகன்ட்ராஃப் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா ஒரு கட்டத்தில் 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின் களமிறங்கிய ரோஹித் மற்றும் தோனியின் நிதானமான ஆட்டத்தால் மீண்டது. பின் தோனி 51 ரன்களுடனும், ரோஹித் 133 ரன்களுக்கும் அவுட் ஆக பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, புவனேஷ்வர் குமார் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்தது 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் ரிச்சர்ட்ஸன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டோனின்ஸ், பெகன்ட்ராஃப் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பீட்டர் சிடில் 9 வருடங்களுக்கு பிறகு ஆடிய போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி ஜனவரி 15ம் தேதி அடிலெய்டில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here