ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ; நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி – நெகிழ வைக்கும் டிவிட்

0
2257

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தன் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க 40 மணிநேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் சுர்ஜித்காக  பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுர்ஜித் குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் “நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில் என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது. அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ. தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. வேதனையோடு ஒரு தீபாவளி” என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here