‘இதனைச் செய்தால் ஆளுநரைப் பாராட்டக் காத்திருக்கிறோம்’

0
209

அதிமுக ஆட்சி உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்ககூடிய வகையில் சட்டமன்றத்தைக் கூட்டி, அந்த பணியை ஆளுநர் நிறைவேற்றுவார் என்றால், எல்லோரும் அவரைப் பாராட்டக் காத்திருக்கிறோம் என திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டார். இதனை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

stalin

இந்நிலையில் தமிழக ஆளுநரின் ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”ஏற்கனவே கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு ஒரு முதலமைச்சரைபோல அல்லது அமைச்சர்களைபோல ஒரு பெரிய சுற்றுப்பயணத்தையே நடத்தியிருக்கிறார், ஆய்வுப் பணிகளை நடத்தியிருக்கிறார். இப்போது திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியிருக்கிறார். கன்னியாகுமரிக்கும் செல்லவிருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரை பொறுத்தவரையில், அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால் ஆய்வு நடத்துவதற்கோ அல்லது மாவட்டவாரியாக சென்று மக்கள் பணிகளை கவனிப்பதற்கோ அதிகாரமும் உரிமையும் இல்லை என்றுதான் எடுத்துச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த ‘குதிரை பேர’ ஆட்சியைப் பொறுத்தவரையில், ஒரு அடிமை ஆட்சியாக நடந்துக் கொண்டிருப்பதால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஒருவேளை நடக்கின்ற ‘குதிரை பேர’ ஆட்சி, ஒரு ஆட்சியே இல்லை என்று ஆளுநர் முடிவு செய்து ஆய்வுப் பணியில் இறங்கியிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த பணிகளில் ஈடுபடும் மேதகு ஆளுநர் அவர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மெஜாரிட்டி இல்லாத இந்த ‘குதிரை பேர’ அதிமுக ஆட்சி உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்ககூடிய வகையில் சட்டமன்றத்தைக் கூட்டி, அந்த பணியை நிறைவேற்றுவார் என்றால், எல்லோரும் ஆளுநரை பாராட்டக் காத்திருக்கிறோம்.” என்றார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்