கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்

0
436

2018 கர்நாடக தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.. காங்கிரஸ் 78 இடங்களிலும் , மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது . கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்கும்அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற
ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி முதல்வராக,காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.இந்த நிபந்தனையை மஜதவும் ஏற்றுக் கொண்டதை அடுத்து தேர்தலுக்குப் பிந்தைய புதிய கூட்டணி உருவானது.

* இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் 36,042 வாக்குகள் வித்தியாசத்தில்
தோல்வியடைந்தார். பாதாமி தொகுதியில் வெற்றி பெற்றார்.

*பாஜக மாநில தலைவர் எடியூரப்பா ஷிகரிபுரா தொகுதியில் 7வது முறையாக வெற்றி பெற்றார் .

*மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமி, சன்னபட்னா, ராமனகாரா ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

*கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியிலிருந்து
சித்தராமையா ராஜினாமா செய்தார்.

*கர்நாடகத்தில் லிங்காயத்துகளுக்கு மத சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கிய காங்கிரஸின் முடிவு அக்கட்சிக்கு தேர்தலில் வாக்குகளாக மாறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

*கர்நாடக தேர்தலில் போட்டியிட்ட அதிமுக கட்சியின் வேட்பாளர்கள் ‘நோட்டா’ பெற்ற வாக்குகள்கூட பெறாமல்
மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

* கர்நாடக தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட 29 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.

கர்நாடக பாஜக தலைவர்களும், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியே மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவின் முதல்வர் வேட்பாளரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா ஆளுநரைச் சந்தித்தார். ஆட்சியமைக்க தங்களுக்கு வாய்ப்பளிக்குமாறும், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் அவர் ஆளுநரிடம் தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா மக்களின் தீர்ப்பை மறந்துவிட்டு பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முனைவதாகக் குற்றம்சாட்டினார் .

சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை மாநிலத்தில் அமைப்பதற்காக ஆளுநரிடம் உரிமை கோரினர். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் குமாரசாமி காங்கிரஸ் மற்றும் சுயேச்சையின் ஆதரவு மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு உள்ளது. அதற்கான கடிதம் ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான பலம் எங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளோம்” என்றார் அவர்.

கர்நாடகத்தில் பாஜக வை தனிப்பெரும் கட்சியாக மாற்றிய மக்களுக்கும், அயராது உழைத்து கட்சியினருக்கும் பிரதமர் மோடி
டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். மக்கள் நலனுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்’ என்று காங்கிரஸ்
கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்ர்

https://twitter.com/RahulGandhi/status/996402968248422400.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்