தமிழக ஆளுநரின் ஆய்வுக்கு தமிழக அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கோவை சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடந்து இரண்டாவது நாளாக ஆளுநர், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தூய்மை இந்தியா’திட்டத்தின்கீழ் செயல்படும் பயோ டாய்லெட்டையும் ஆய்வு செய்தார். இது குறித்து ஆளுநர் பன்வாரிலால், ஆய்வு செய்தால்தானே அரசைப் பாராட்ட முடியும் என்றார். மகாராஷ்டிராவைவிட கோவையில் தூய்மை பணிகள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆளுநரின் ஆய்வுக்கு தமிழக அமைச்சர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இது குறித்து அமைச்சர் வேலுமணி, ஆளுநர் அதிகாரிகளை சந்தித்து ஆய்வு நடத்தியது ஆரோக்கியமானது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோன்று, தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு அதிகாரிகளை ஆளுநர் சந்திக்கக் கூடாது என்று எதுவுமில்லை என்றும், மாநில அரசின் அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு தலையிடுவதாக நினைப்பது தவறு என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்