உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கைக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது. இதில் 13 மாணவர்கள் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் பகுதியில், ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை இன்று (ஏப்.26) காலை பள்ளி வாகனம் ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்த வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரயில், பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் வேனிலிருந்த மாணவர்களில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்