காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் அமைப்பை , அரபு நாடுகளில் இருக்கும் அமைப்பான முஸ்லிம் பிரதர்ஹுட் (Muslim Brotherhood) உடன் இணைத்து பேசினார். மேலும் ஆர் எஸ் எஸ் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இந்தியா நிறுவனங்களை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

லண்டனில் பேசிய ராகுல் காந்தி பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தேசத்தை பிளவுபடுத்துகின்றன என்றும், மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புவதாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

முஸ்லிம் பிரதர்ஹுட் அரபு நாடுகளில் இருக்கும் பழமையான அரசியல் இஸ்லாமிய குழு. இந்த குழு இன்னமும் சில அரபு நாடுகளில் அதிகாரபூர்வமான அரசியல் கட்சியாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை

ஆர் எஸ் எஸ்ஸின் கொள்கையும் அரபு நாடுகளில் இருக்கும் முஸ்லிம் பிரதர்ஹுட்டின் கொள்கையும் ஒன்றே என்று ராகுல் காந்தி கூறினார்.

மோடி அரசு 2016, நவம்பர் மாதம் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆர் எஸ் எஸ்ஸின் கொள்கை என்று ராகுல் காந்தி தெரிவித்தார். ஆர் எஸ் எஸ் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ரிசர்வ் வங்கி மூலமாக பிரதமர் மோடியை வைத்து செயல்படுத்தியது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here