இந்திய ராணுவத்தை அவமதித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாட்டிற்காக போரிட வேண்டிய தேவையேற்பட்டால், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தை உருவாக்க முடியும் என்றும், ஆனால் இந்திய ராணுவத்திற்கு இதனைச் செய்ய ஆறு முதல் ஏழு மாதங்களாகும் என்றும் பேசினார். அவரின் இந்தப் பேச்சு, இந்திய ராணுவத்தை அவமானப்படுத்தும் விதமாக உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

anand

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ஆனந்த் சர்மா, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கும் இந்தவேளையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது என்றார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தவறிழைத்து விட்டார் என்றும், அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றார். நாட்டின் பாதுகாப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் ஒப்படைக்க பிரதமர் மோடி விரும்புகிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here