ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுப்பதால்தான் தமிழர்கள் மீது தாக்குதல் – ராகுல்காந்தி

0
317

தமிழர்கள் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு அடிபணிய மறுப்பதால் படுகொலை செய்யப்படுகின்றனர் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார்.

இன்று காலை தூத்துக்குடி சம்பவம் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாள் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு அரசின் பயங்கரவாதம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) பொதுமக்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று காலை (செவ்வாய்க்கிழமை) மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .
அப்போது போலீஸார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 15 பேர் உயிரிழந்தனர் . பலர் காயமடைந்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here