சக்தி சௌந்தர்ராஜன் அடுத்து ஆர்யா இயக்கும் படத்தை இயக்குகிறார்.

சக்தி சௌந்தர்ராஜன் சத்தமில்லாமல் இரண்டு வெற்றிப் படங்கள் தந்திருக்கிறார். மிருதன், டிக் டிக் டிக். மிருதன் தமிழின் முதல் ஸேnம்பி திரைப்படம். டிக் டிக் டிக் முதல் விண்வெளிக்கதை.

டிக் டிக் டிக் படத்தை விமர்சகர்கள் கழுவிஊற்ற, மக்கள் படத்தை தேடிப்போய் பார்த்ததுடன் இந்த வருடத்தின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அதனை மாற்றினார்கள். டிக் டிக் டிக் படத்தின் வெற்றி, இந்த வருட தமிழ் சினிமா சரித்திரத்தில் ஓர் ஆச்சரியம்.

சக்தி சௌந்தர்ராஜன் அடுத்து ஆர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கிறது. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்