சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான தேர்தல் வரும் டிச.21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், திமுக சார்பில் கடந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ், மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில் கடந்த முறை ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. மேலும், இத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு மட்டுமே திமுகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். மேலும் திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதிமுகவை பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார். அதிமுகவிற்கு பாடம் கற்பிக்கவே திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: அன்புசெழியன்… களையை பிடுங்கலாம், களத்தை என்ன செய்வது? – கோலிவுட்

வேதாளம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்