சென்னை ஆர்கேநகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டியிடுகின்றனர். மேலும், நமது கொங்கு முன்னேற்றக்கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது

சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான தேர்தல் வரும் டிச.21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதிப் பட்டியல் வியாழக்கிழமை (இன்று) வெளியிடப்பட்டது. இதில் நடிகர் விஷால், தீபா உட்பட 73 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும், 13 பேர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியல்படி, அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 59 பேர் போட்டியிடுகின்றனர்.

இதில் சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். பதிவு செய்த அரசியல் கட்சிகளான நமது கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் கட்சி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தங்கள் தரப்புக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து குலுக்கல் முறையில், நமது கொங்கு முன்னேற்றக்கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: அன்புசெழியன்… களையை பிடுங்கலாம், களத்தை என்ன செய்வது? – கோலிவுட் வேதாளம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்