சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான தேர்தல் வரும் டிச.21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், திமுக சார்பில் கடந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ், மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

இந்நிலையில் மதிமுகவும் திமுகவுக்கு ஆதரவளித்துள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயாளர் வைகோ, தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு மதிமுக, மீண்டும் திமுகவுக்கு ஆதரவளித்துள்ளது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்