ஆர்எஸ்எஸ், பாஜகவில் உள்ள சிலருக்கு அடிமையாகி இருக்கிறது நம் நாடு – ராகுல் காந்தி

0
442

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நாட்டை பிளவு படுத்தி மக்களை பிரிக்கும் சக்தியாக செய்லபடுகிறது என்று டெல்லியில் நடந்த ஓபிசி சம்மேளனில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

தற்போது நம் நாடு , ஆர்எஸ்எஸ், பாஜகவில் உள்ள மூன்று, நான்கு பேருக்கு அடிமையாகி சேவை செய்துவருகிறது. எம்.பிக்கள் கூட பேசுவதற்கு அஞ்சுகிறார்கள். மற்றவர்கள் பேசினாலும் அதை பாஜக கவனிப்பதில்லை.
அடுத்த 6 முதல் 8 மாதங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து உருவெடுக்கும் சக்தியை நீங்கள் பார்க்கலாம்.எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரே தளத்தில் ஒற்றுமையாக இணைந்து இவர்களை எதிர்க்க வேண்டும். அப்போது மோடி, அமித் ஷா, மோஹன் பகவத் ஆகியோர் இந்தியாவின் பலத்தை பார்ப்பார்கள். இந்தியாவைக் குறிப்பிட்ட இரண்டு, மூன்று நபர்களால் ஆள முடியாது என்பதை விரைவில் தெரிந்து கொள்வார்கள்.

இங்கே வேலை செய்பவர்களுக்கு பாராட்டு கிடைப்பதில்லை . உழைப்பவர்களுக்கு மிகவும் அரிதாகவே உழைக்கும் நன்மைகள் கிடைக்கிறது .விவசாயிகள் மற்றும் ஏழை தொழிலாளர்களுக்கு தாங்கள் செய்யும் வேலைக்கு அல்லது திறமைக்கு ஏற்றவாறு கூலி கிடைப்பதில்லை. அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். காங்கிரஸ் பொதுமக்களை முன்னிலைபடுத்துகிறது. மத்தியில் இருக்கும் பாஜக அரசு ஆர் எஸ் எஸ்ஸை முன்னிலைபடுத்துகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசில் விவசாயிகள் நலன் புறந்தள்ளப்பட்டுவிட்டது. அவர்களுக்கு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை. அதேசமயம், பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ.2.50 லட்சம் கோடிவரை கடன் தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு. ஆனால், விவசாயிகளுக்குக் கடனும் தருவதில்லை, கடன் தள்ளுபடியும் தருவதில்லை, இதனால், அவர்கள் தற்கொலை செய்யும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களின் குடும்பத்தினரும், குழந்தைகளும் கண்ணீருடன் வாழ்ந்து வருகிறார்கள். சிறு தொழில் செய்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் கடன் கொடுக்க வங்கிகள் தங்கள் கதவுகளைத் திறப்பதில்லை

முலாயம் சிங், லாலுபிரசாத் யாதவ் போன்ற மாநிலத்தில் வலிமை வாய்ந்த தலைவர்களை இழந்துவிட்டோம். இவர்கள் 90 களில் மிகச்சிறந்த வாக்குவங்கிகளை வைத்திருந்தனர். நம் மக்கள் தொகையில் 52 சதவீதமாக இருக்கும் ஓபிசி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படும். ஓபிசி பிரிவினரின் வலிமையை காங்கிரஸ் கட்சி அங்கீகரிக்கிறது மற்றும் அரசியலில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க விரும்புகிறது .

இங்கே வேலை செய்பவர்களுக்கு பாராட்டு கிடைப்பதில்லை . அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், பிரதமர் அலுவலகம் அவர்களைக் கண்டுகொள்வதில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here