தூதுவளையில் சட்னி, தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தூதுவளையை வைத்து சூப்பரான சத்தான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தூதுவளை இலை – 10
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 8 பல்
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு
ரசப் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த தெளிவான நீர் – 1 கப்
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

1. தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

2. தூதுவளை இலையைச் சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி அத்துடன் பூண்டைச் சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் பொடித்துக் கொள்ளவும்.

3. பருப்பு நீரில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து அதில் பொடித்த தூதுவளை இலை, பச்சை மிளகாய், ரசப்பொடி, மஞ்சள்தூள், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

4. ரசம் நுரைத்து வரும்பொழுது இறக்கி வைக்கவும்.

5. கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதம் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து

6. ரசத்தில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

உங்கள் உடல் ஆரோக்கியத்தை காக்கும், தொண்டைக்கு இதமான, தூதுவளை பருப்பு ரசம் தயார்.

தூதுவளை, தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகியவற்றைகுணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும், பலஆய்வுகள் மூலம் தூதுவளை தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.