ஆரம்பிச்சாட்டாங்க ….வந்தே மாதரம் சொல்லாதவர்கள் இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள் – ஒடிசா மோடி

Those who refuse to say Vande Mataram have no right to live in India: Sarangi

0
461

பிரதாப் சந்திர சாரங்கி, ஒடிசாவில் பாலசோர் தொகுதியில் இருந்து முதல் முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்பி யாகி  இருப்பவர். இந்த நாடு சின்ன சின்ன கட்சிகளை ஒரு போதும் தேர்ந்தெடுக்காது என்று கூறியுள்ளார். 

விலங்குகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் பிரதாப் சாரங்கி வந்தே மாதரம் என்று சொல்லாதவர்கள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்று சர்ச்சையான  கருத்தைக் கூறியுள்ளார்.  இதுதான் அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் முதன்முதலாக பேசிய பேச்சு . 

அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி மக்களவையில் பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள் ;பாதிரியார் குடும்பத்தோடு எரிக்கப்பட்டாரே நினைவிருக்கிறதா ? இந்தக் கொலைக்கும் எம்பி -யாகியிருக்கும் பிரதாப் சாரங்கி (ஒடிசாவின் மோடி)க்கும் தொடர்பிருக்கு……https://bit.ly/2WxlIRs

இதையும் படியுங்கள் ; மதமாற்றம் செய்வது என்பது செய்த உதவிக்கு பிரதிபலனாக பெண்களை உறவுக்கு அழைப்பது போன்றது – எளிமையான எம்பி ஒடிசாவின் மோடியின் அனல் கக்கும் பேச்சுhttps://bit.ly/2IqZEib

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மத்திய அமைச்சரும், முதல் தடவையாக எம்.பி ஆகியிருப்பவருமான் ஒடிஷாவின் பிரதாப் சந்திர சாரங்கி, காங்கிரஸ்  கட்சியைக்  கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் சமயத்தில் பொதுமக்களிடம்  பிரதமரைப் பற்றி தவறான பரப்புரை நிகழ்த்தியதற்காக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிரதமர் மோடியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.  

தாங்கள் அடைந்துள்ள கடுமையான தோல்வி குறித்து எதிர்க்கட்சிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். அதேசமயம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடியை தாராளமாகப் புகழ வேண்டும்.

மோடியை தோற்கடிப்பதற்காகக் கூடிய எதிர்கட்சிகளின் கலப்படக் கூட்டணிகளை மக்கள் புறக்கணித்து விட்டு, தூய்மையானதைத் தேர்வு செய்துள்ளார்கள்.

எதிர்க்கட்சிகள் மோடி மீது பொறாமை கொண்டுள்ளார்கள். அவர்கள் இந்தியாவைத் துண்டாட நினைப்பவர்களுடன் கூட்டணி சேரக் கூடாது. அத்தகையோருக்கு வரலாற்றில் இடம் இல்லை என்றார். 

எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் எல்லோரும் இந்த மண்ணின் குழந்தைகள், இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் யாராக இருந்தாலும் நாம் எல்லோரும் இந்திய தாயின் குழந்தைகள் என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here