ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கி விடாதே – பாஜக பிரமுகர்களுக்கு பாரதிராஜா எச்சரிக்கை

0
452
Bharathiraja

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் மேற்கோளை முன்வைத்து பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, கல்யாணராமன் போன்றவர்கள் பொதுவெளியிலும், தொலைபேசியிலும் கீழ்த்தரமான தரங்கெட்ட வார்த்தைகளை பேசி வருகின்றனர். வைரமுத்துவின் மீதான இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜாவும் தனது கண்டனங்களை அறிக்கையொன்றில் பதிவு செய்துள்ளார். மேலும் பிஜேபிக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அவ்வறிக்கை…

என் இனிய தமிழ் மக்களே,

தமிழகத்தில், தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகிவிட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கருத்து சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.

சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம் என்னை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தின் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள். இன்று, நம் கொடுப்பினை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங் கவிஞன், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தமிழை திசைகள்தோறும் தெரியப்படுத்தியவர்.

இந்திய அரசின் பத்மஶ்ரீ , பத்மபூஷன், சாகித்ய அகாடமி என தன் படைப்புகளால் தமிழை உலக உச்சிக்கு கொண்டு போன பெருமைக்குரிய தமிழன் வைரமுத்து.

மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டை காப்பியங்கள் என்றால், கவிப்பேரரசு வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிமையப்படுத்திய கவிஞனை இழிசொற்களால் எப்படி பேசலாம்? வைரமுத்து என்பவர் தனிமனிதனல்ல. தமிழகத்தின் பெருஅடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு படைப்பாளன் தன் கருத்துகளை சொல்லலாம். இல்லை மேற்கோள் காட்டலாம். அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக் கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை.

எங்கள் வம்சாவழி,

எங்கள் உணர்ச்சிகளின் வடிகாலே ஆயுதங்கள்தான்…

காலமாற்றமும், விழிப்புணர்வும்தான்,
எங்களை ஆயுதக்கலாச்சாரத்திலிருந்து மாற்றி வைத்தது…

கவிப்பேரரசு வைரமுத்துவை நீ பேசவில்லை…

எங்கள் தாய்வழி சகோதர, சகோதரிகளை,
எங்கள் தொப்புள்க்கொடி உறவுகளைக் கொச்சைப்படுத்தி விட்டாய்…

உன்னுடைய பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது…

தமிழ் உணர்வுகளைச் சிதைத்தது…

நீ தமிழனாக இருந்திருந்தால் அப்படிப் பேசியிருக்க மாட்டாய்…

பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ…

நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமேயொழிய

தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும்
இழக்கவில்லை…

எச்சரிக்கை.

மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கி விடாதே.

இப்படித் தவறாகப் பேசும் பராரிக்கு உடனிருக்கும்
நல்ல தமிழ்த் தலைவர்கள்
பாடம் புகட்ட கடமைப்பட்டவர்கள் என்பதை
இந்த அறிக்கையின் மூலமாகப் பதிவு செய்கிறேன்.

அன்புடன்
பாரதிராஜா

இதையும் படியுங்கள்: நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் இவர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்