ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்: நாகலாந்து முதல்வர்

0
275

நாகலாந்தில் அமல்படுத்தியுள்ள ஆயுதப் பாதுகாப்பு சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் நெய்பியு ரியோ திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை இரவு பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் எனத் தவறாக நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 13 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து நடந்த வன்முறையில், பொதுமக்கள் தரப்பிலிருந்து மேலும் ஒருவர் மற்றும் ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் நெய்பியு ரியோ கூறுகையில்,

மத்திய உள்துறை அமைச்சரிடம் இந்த சம்பவம் குறித்து பேசினேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவுள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு தலா ரூ. 11 லட்சமும் மாநில அரசு தலா ரூ. 5 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்படும்.

மேலும், நாகலாந்தில் இருந்து ஆயுதப் பாதுகாப்பு சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். இந்த சட்டம் நம் நாட்டின் இறையான்மையை கெடுக்கிறது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here