ஆயுதபூஜைக்கே தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை

0
223

கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் இன்னமும் திரையரங்குகள் திறக்கப்படாததால் படங்களை வெளியிட முடியாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அமைந்துள்ள கேம்ப் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இன்று(திங்கள்கிழமை) சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் கூறினர்.

இந்த சந்திப்பின்போது, ஆயுதபூஜைக்கே (அக்டோபர் 25 வரும் ஞாயிற்றுக்கிழமை) தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்கவேண்டும் என முதலமைச்சரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை கடிதத்தை கொடுத்துள்ளனர்.

மேலும் திரையரங்குகளில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் என்பதற்கு பதிலாக கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தியேட்டர்களைபுதுப்பிக்க அனுமதிக்க வேண்டும், உரிமம் பெற பொதுப்பணித்துறை  இடமே அனுமதி பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here