டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற டெல்லி மாநகராட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைச் சொல்லி, மோடியின் ஆதரவாளர்கள் கோஷமிட்டுள்ளனர். இது கெஜ்ரிவாலுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : கேரளா: சிஆர்பிஎஃப் வீரர்கள் 400 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

கடந்த சனிக்கிழமை டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான பரப்புரைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின்போது, டெல்லி முதல்வருக்கு எதிராக, ”மோடி மோடி” என பாஜகவின் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்து கோஷமிடத் துவங்கினர். ஆனாலும் கெஜ்ரிவால் தனது பேச்சை நிறுத்தாமல் டெல்லி அரசின் திட்டங்கள் குறித்து தொடர்ந்து விவரித்தார். அப்போது பேசிய கெஜ்ரிவால், ”மக்களின் வீட்டு வரிகளை மோடி தள்ளுபடி செய்தால், நானும் மோடி மோடி என கோஷமிடத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

இதையும் படியுங்கள் :10 நிமிடம் விளையாடினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

முன்னதாக கெஜ்ரிவால் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியைச் சந்தித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள குளறுபடி விவகாரம் குறித்து விவாதித்தார். இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், ”மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் அது பாரதிய ஜனதா கட்சிக்கு பதிவாகிறது” என குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள் : மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து மாதவிடாய் சோதனை நடத்திய வார்டன்; கொந்தளித்த பெற்றோர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்